பிறந்தநாள் கவிதை
அன்பே... உன்னை காணும்போதல்லாம் கால்கள் இரண்டும் தலைகீழாய் நடக்குதடி காணாத நேரமெல்லாம் கண்கள் இரண்டும் கண்ணீரில் தவிக்குதடி நீ நெருங்கும்போதெல்லாம் இதயம் இரு மடங்காய் துடிக்குதடி நீ மூச்சுவிடும் காற்றை என் நெஞ்சம் உள் இழுத்தால்...விட மறுகுதடி நீ என்னை அணைத்தால் தேகம் குழந்தையாய் மாறி..உன் நெஞ்சில் சாயுதடி.. பெண்ணே... என் மூன்றாம் பிறை நிலவே ... மூன்றாம் முறையாக இந்நாளை கொண்டாடுகிறோம் மூச்சடங்கும் வரை கொண்டாடுவோம் பெண்ணே ... உன்னோடு கொஞ்சி க் கூத்தாட ஏங்குகிறேன்... அனால் நீ கோடி தூரத்தில் இருக்கிறாயே! உன் கை பிடிக்க ஏங்குகிறேன்... கை எட்டிய தூரத்தில் நீ இலையே! புவியிருப்பால் கீழே விழும் கற்களைப்போல் உன் விழி ஈர்ப்பால் நான் விழுந்தேனே.. தரை சேர்ந்த கற்களை பொல் உன் மனம் சேர துடிக்கிறேனே... ஆயிரம் கவிதைகள் மனதில் தோன்றினும், உன் அழகுக்கு ஈடாய் ஒன்றும் இலையே.. உன்னை வர்ணிக்கவும் வார்த்தைகள் போதவில்லையே பெண்ண...