என்னவளே 1 (paartha mudhal naal)
ஜனவரி 19 -2018
கதிரவன் தன் கதிரொளியால் கண்ணை மறைக்க...அன்று 3:00 மணிக்கு கல்லூரி முடித்து வீடு செல்ல கிளம்பினேன்.
கல்லூரி வாசலில் கதிரவனின் வெப்பத்தில் பேருந்திற்காக காத்திருந்தேன்.
அங்கு வந்தாள் அவள் என் தேவதை....
கருத்த கண் இமையோடு அழகிய சிறு புன்னகையோடு ஆள் கவிழ்க்கும் இரு கன்ன குழிகளோடு...
அருகே அவள் நண்பியோடு வந்தால்.
பின் பேருந்தும் வந்தது.
அவள் ஈர்த்த இழுப்பில் நானும் அவள் பின்னாள் ஏறினேன்.
"என்ன மாயம் விதி செய்ததோ"..!
அனைவரும் இருக்கை கிடைத்து அமர்ந்து வர, நாங்கள் இருவர் மட்டும் நின்று வந்தோம்.
அவள் ஈர்த்த இழுப்பில் கண்கள் தானாக அவள் பக்கம் திரும்பியது.
என்ன நடப்பினும் விழிகள் அவளை விட்டு விலகவில்லை.
அடடா என்ன அழகு...!
என்று என் மனதில் அவளை வர்ணித்து வந்தேன்.
இறங்கும் இடம் வரும் வரை அந்த தேவதையை வியந்து ரசித்து அவளை கண்டு வந்தேன்.
இறங்கும் இடம் வந்தது மனம் மெதுவாக தளர்ந்தது.. இனி அவளை பார்க்க இயலாதோ என்ற ஏக்கத்தோடு பேருந்தை விட்டு இறங்கினேன்..
மீண்டும்..."என்ன மாயம் விதி செய்ததோ"
அன்று நான் வண்டி எடுத்து வரதனால், வீடு செல்ல மற்றொரு பேருந்து பிடிக்க போனேன்.
அவள் நினைப்போடு பேருந்தில் ஏறி இடது பக்கம் அமர்ந்து வந்தேன் ஏக்கத்தில் தரை பார்த்து தலை வாட பேருந்தும் கிளம்பியது.
மீண்டும்..."என்ன மாயம் விதி செய்ததோ". பின் இரண்டாவது நிறுத்தத்தில் அவள் ஏறினால்.
வியப்போடு என் விழிகள் அவளை பார்க்க....
நடப்பதென்ன புரியாது ஆனந்தமாக சிரித்து வந்தேன்... புன்னகையில் என் முகம் தாமரையாய் பூத்தது.
மீண்டும்.... விதி செய்த மாயம்.
காலி இடங்கள் பேருந்தில் நிரம்பி இருக்க , அவள் எங்கும் இது என் முன் இருக்கும் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
மெச்சியபடி அவளை பார்க்க மனம் சிலிர்த்து போனேன்.
பயணசீட்டை அவள் வாங்க, அவள் வசிக்கும் இடம் அறிந்தேன்... அவள் நிறுத்தம் வந்தது....
விதியோ விளையாடி ஓய்ந்தது.
அன்றைய தினம் அவள் நினைவால் போனது.
அன்று இரவோடு இரவாக
அவளை நான் கண்டேன் என் கனவாக..
Jan 19 -2018
Kadhiravan thann kadhiroliyaal kannai maraikka...andru 3:00 manikku kaloori mudithu veedu sella kilambinen.
Kaloori vaasalil kadhiravanin veppathil
Perundhirkaaga kaathirundhen.
Angu vandhal aval
En dhevadhai....
Karutha kan imaiyodu
Azhagiya siru punnagaiyodu
Aal kavizhkum iru kanna kuzhigalodu...
Arugey aval nanbiyodu vandhal.
Pin perundhum vandhadhu
Aval eertha izhupil naanum aval pinney earinen
"Enna maayam vidhi seidhadho"..!
Anaivarum irukkai kidaithu amarndhu vara naangal iruvar mattum nindru vandhom
Aval eertha izhupil kangal thaanaga aval pakkam thirumbiyadhu
Enna nadappinum vizhigal avalai vitu vilagavillai
Adada ena azhagu...!
Endru en manadhil avalai varnithu vandhen
Irangum idam varum varai andha dhevadhaiyai viyandhu rasithu avali kandu vandhen
Irangum idam vandhadhu
Manam medhuvaaga thalarndhadhu..
Ini avalai paarka iyalaadho endra eakathodu perundhai vittu iranginen..
Meendum..."Enna maayam vidhi seidhadho"
Andru naan vandi eduthu varadhanaal, veedu sella matroru perundhu pidika ponen.
Aval ninaippodu perundhil eari idathu pakkam amarndhu vandhen
Yeakathil tharai paarthu thalai vaada perundhum kelambiyadhu
Meendum..."Enna maayam vidhi seidhadho".
Pinn irandaavadhu niruthathil aval earinaal
Viyappodu en vizhigal avalai paarka...
Nadappadhenna puriyaadhu aanandhamaga sirithu vandhen...
Punnagaiyil en mugam thaamaraiyaai poothadhu
Meendum.... Vidhi seidha maayam.
Kaali idangal perundhil nirambi iruka , aval engum iladhu en mun irukum irukaiyil vandhu amarndhal
Mechiyapadi avalai paarka en manam silirthu ponen.
Payanacheetai aval vaanga aval vasikum idam arindhen...
Aval nirutham vandhadhu....
Aval iranginaal, aanal en manamo avalai vittu iranga villai.
Vidhiyo vilayadi oyindhadhu.
Andraya dhinam aval ninaivaal ponadhu.
Andru iravodu iravaaga
Avalai nan kanden en kanavaaga..
Comments
Post a Comment