Kavidhai 3
விரலோடு விரல் கோர்த்து வானத்தில் பார்ப்போம் வா
பெண்ணே...என் பெண்ணே
விழியோடு விழி வைத்து விண்ணுலகம் காண்போம் வா
கண்ணே...எந்தன் கண்ணே
தோள் மீது தோள் சாய்ந்து கனவுலகில் மிதப்போம் வா
உயிரே...எந்தன் உயிரே
மயில் தோகை போலெ நாம் மெதுவாக வருடுவோம் வா
அன்பே...என் அன்பே
பூ மெத்தை மேல் விழுவோம் வா..
கட்டி அணைத்து படுப்போம் வா..
மன இடைவேளையை குறைப்போம் வா..
பூவுலகத்தை நாம் மறப்போம் வா...
எந்தன் கன்னத்தில் கொஞ்சம்
உதட்டில் கொஞ்சம்
முத்த மழையை நீ பொழிவாயா...
உன் உதடு ரேகையை நீ பதிப்பாயா...
உணர்ச்சிகள் என்றும் காமத்தை சேராதடி...
காதலின் வெளிப்படையே கலவி என்னும் புனிதமடி..
புனிதத்தின் பலனாக நாம் பெறுவது குழந்தையடி...
கட்டில் என்னும் மேடையில் ஏறி
கவிதை ஒன்று வாசிப்போம் வா
ஒருவருக்கு ஒருவர் நேசிப்போம் வா
அழகிய குழந்தை பெறுவோம் வா
குடும்ப பயணத்தை துடங்குவோம் வா
இறுதி வரை ஒன்றாக செல்வோம் வா
குயிலே உந்தன் துகிலை கேக்காமல் தொடமாட்டேன்
ஆனாலும் உன்னை நான் வேறொருவன் பெற விடமாட்டேன்
உன்னை நான் மணமுடிக்க சீதனம் எதுவும் பெறமாட்டேன்
இறுக்கி பிடித்த உந்தன் விரலை என்றும் நான் விடமாட்டேன்
உன்னை தவிர வேறு பெண்ணை
நான் ஒருபோதும் நினைக்கமாட்டேன்
ரொம்ப நல்லா இருக்குடா..
ReplyDeleteI admired...
Pegi 18😜
ReplyDeleteSemaa
ReplyDelete