Kavidhai 1
வாசலில் இருக்கும் பூந்தோட்டமே.....
அதில் முளைத்து வரும் பூச்செடியே.....
பெரிதாய் வளர்ந்து நின்ற பூமரமே....
அதில் அமர்ந்து இசைப்பாடும் பூங்குயிலே....
காலை முதல் இரவு வரை ரசித்தேன்
நீ இல்லாவிட்டால் நான் எதை ரசிப்பேன்.....!
கடலில் நடுவில் உருவான தீவே
அத்தீவில் பூத்த அழகிய பூவே
உன்னை பரிக்க வந்தேன் கடல் தாண்டி
பரிக்கவிடாமல் தடுத்தாய் ஏண்டி...?
மயில் தோகை போல் விரிந்த கூந்தல்
அதில் ஏறி அமர்ந்தன அழகிய பூக்கள்
என் இதயத்தில் ஏற்ப்பட்டது ஒரு தாக்கல்
உன் நினைவில் கழித்தது என் நாட்கள்
தாமரை இதழ் போன்ற தேகம்
அதைச் சுற்றி படர்ந்தது மேகம்
அதன் மழையில் தணிந்தது என் தாகம்
ஆசை என்னும் காட்டில் ,ஒரு பறவையாய் நான் பிறந்தேன்
கனியாக முளைத்தவளே, உன்னைத் தேடி காடெங்கும் பறந்தேன்
நிலவில் ஒளியாய் இருந்தாய்....
கடலில் அலையாய் இருந்தாய்....
பூவில் இதழாய் இருந்தாய்....
கணனியில் சாறாக இருந்தாய்...
என் உடலில் உயிராக இருந்தாய்....
அவள் கைகளில் ஓடும் விளையல்களே...
அவள் காதுகளில் ஆடும் கோடுகளே...
அவள் விரல்களில் அமர்ந்திருக்கும்
மோதிரங்களே....
அவள் கால்களில் குதிக்கும்
கொலுசுகளே...
உங்களில் ஒன்றாய் நான் மாறமாட்டேனா....!
Comments
Post a Comment