என்னவளே 1 (paartha mudhal naal)
ஜனவரி 19 -2018 கதிரவன் தன் கதிரொளியால் கண்ணை மறைக்க...அன்று 3:00 மணிக்கு கல்லூரி முடித்து வீடு செல்ல கிளம்பினேன். கல்லூரி வாசலில் கதிரவனின் வெப்பத்தில் பேருந்திற்காக காத்திருந்தேன். அங்கு வந்தாள் அவள் என் தேவதை.... கருத்த கண் இமையோடு அழகிய சிறு புன்னகையோடு ஆள் கவிழ்க்கும் இரு கன்ன குழிகளோடு... அருகே அவள் நண்பியோடு வந்தால். பின் பேருந்தும் வந்தது. அவள் ஈர்த்த இழுப்பில் நானும் அவள் பின்னாள் ஏறினேன். "என்ன மாயம் விதி செய்ததோ"..! அனைவரும் இருக்கை கிடைத்து அமர்ந்து வர, நாங்கள் இருவர் மட்டும் நின்று வந்தோம். அவள் ஈர்த்த இழுப்பில் கண்கள் தானாக அவள் பக்கம் திரும்பியது. என்ன நடப்பினும் விழிகள் அவளை விட்டு விலகவில்லை. அடடா என்ன அழகு...! என்று என் மனதில் அவளை வர்ணித்து வந்தேன். இறங்கும் இடம் வரும் வரை அந்த தேவதையை வியந்து ரசித்து அவளை கண்டு வந்தேன். இறங்கும் இடம் வந்தது மனம் மெதுவாக தளர்ந்தது.. இனி அவளை பார்க்க இயலாதோ என்ற ஏக்கத்தோடு பேருந்தை விட்டு இறங்கினேன்.. மீண்டும்..."என்ன மாயம் விதி செய்ததோ" அன்று நான் வண்டி எடுத்து வரதனால், வீடு செல்ல ...