kavidhai 2
கருவிழியிலே வண்ண நிறங்கள் தெரியுதே.... இது என்ன அதிசயம்....... சதை இதயத்திலே ஒரு காதல் மலருதே....! இது என்ன அதிசயம்..... பெண் கருவிலே புது உயிர் ஒன்று தோன்றுதே...! இது என்ன அதிசயம்..... அதிசயம் நிறைந்த உலகிலே அத்தியாயமாக தோன்றினேன்.... அதிசயமாக என் காதலை ஒரு அதிசய பெண் மேல் தூவினேன்.... வீட்டின் பின் இருக்கும் ஒரு கல்லில் உன் முகம் பொறித்தேனே... உன் வெண்மை விழியும் மூக்கு முழியும் அதில் நான் அச்சு பதித்தேனே... ஆண் பருவத்தை கவரும் உன் புருவத்தை நெற்றிக்கு கீழே செதுக்கினேனே.... அழகு வடிவும் சுருக்க முடிவும் கொண்ட உன் உதுகளை மெல்ல வரைந்தேனே... கையை கிழித்து குருதி எடுத்து அதற்கு செந்நிறம் கொடுத்தேனே... உன் முழு உருவம் அழகாய் நானும் உன்னை போலவே வடிவமைத்தேனே.. நீ என்று நினைத்து நானும் தினமும் அதோடு வாழ்ந்து வந்தேனே... காதல் என்னும் வலையில் என்னை தள்ளிவிட்டாயே.... கவிதையோடு நானும் வந்தேன்,வேண்டாம் என்று சொல்லிவிட்டாயே... உன் நினைவுகள் இல்லாவிட்டால் நான் மாய்ந்து விடுவேனே... புயல் தள்ளிய மரம் போலெ சாய்ந்து விடுவேனே.... ...