Malarum varigal...
உன் தேகத்தை உரசியதும் கை முடிகள் பூவானதே ..... வேர்வை நீர் கொட்டும் தேன் ஆனதே... என் சதைகள் மணம் வீசும் சந்தனமானதே... என் எலும்புகள் இனிக்கும் கரும்பானதே... என் ரத்தம் கொதிக்கும் நெருப்பானதே..... என் தேகத்தை சுற்றி மேகம் உருவானதே... கோடை வெயிலிலும் உடல் குளிர் ஆனதே.... விழிகள் மூடி பகலும் இரவானதே.... என் வாழ்க்கை அது நான் காணாத கனவானதே....! வீணைப்போல் இருக்கும் உன் இடையில் ஒரு மெல்லிசை கண்டேன் நிலவை போல் இருக்கும் உன் கண்களில் ஒரு வெண்ணொலியைப் பார்த்தேன் பனிக்கட்டி போல் இருக்கும் உன் மேனியில் உடல் சிலிர்க்கும் குளிர் உணர்ந்தேன் அவள் மண்ணில் முளைத்த புல்லா....! இல்லை பயிரில் வளர்ந்த நெல்லா ....! அவள் மல்லிகை கோர்க்கும் நூலா.....! இல்லை பசுக்கள் தரும் பாலா......! அவள் சாலை ஓரம் உதித்த நிலா என் கனவில் தினம் வருவாள் உலா.....! அன்பிர்க்கு அளவில்லை...... கவிதைக்கு மொழி இல்லை.... நீருக்கு சுவை இல்லை...... வெண்மைக்கு நிறம் இல்லை..... கடலுக்கு எல்லை இல்லை..... வானத்திற்கு முடிவு இல்லை..... காதலுக்கு அழிவில்லை.... பெண்ணே, ...